சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் முதலாவது தடையற்ற பல்தட வாகன போக்குவரத்துக்கான சுங்கச் சாவடி கட்டண முறை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 19 JUN 2026 4:45PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலை 48-ன் தௌலத்புரா சுங்கச்சாவடியில் ராஜஸ்தானின் முதலாவது தடையற்ற பல்தட வாகன போக்குவரத்துக்கான சுங்கச் சாவடி கட்டண முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த அதிநவீன சுங்கச் சாவடி கட்டண முறை மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படாமல் நேரடியாகச் செல்ல முடியும். இது வாகன நெரிசலைக் குறைத்து தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பம் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரம், ஃபாஸ்டேக் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பணியாளர்கள் தலையீடின்றி சுங்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. தொழில்நுட்பம் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

முன்னதாக குஜராத் மற்றும் தில்லியில் இந்த முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இந்த தடையற்ற சுங்கக் கட்டண முறையினால் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு, எரிபொருள் சேமிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது. ஃபாஸ்டேக் கணக்கில் போதிய இருப்பு இல்லாத வாகனங்களுக்கு மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை 72 மணி நேரத்திற்குள் செலுத்தத் தவறினால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275237&reg=3&lang=1

***

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2275680) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी