அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

காஸ்மிக் ஊடுகதிர் மின்னல்களின் தோற்றம் குறித்த தடயங்களை வானியல் ஆயவாளர்கள் கண்டறிந்துள்ளனர்

प्रविष्टि तिथि: 19 JUN 2026 2:56PM by PIB Chennai

கடந்த ஆண்டு நவம்பர் 7 அன்று கண்டறியப்பட்ட, 'அதிவிரைவான ஊடுகதிர் நிலைமாற்றங்கள்' எனப்படும் விண்வெளியில் அரிதாக நிகழும் வானியல் ஊடுகதிர் மின்னல்களுக்குப் பின்னணியில் உள்ள தடயங்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரத்தின் சரிவு அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் இணைப்புடன் தொடர்புபடுத்திய இந்த எக்ஸ்-கதிர் மின்னலைப் பற்றிய ஆய்வு, இது தொடர்பான இயற்பியலை நன்கு புரிந்துகொள்ள உதவிடும்.

இத்தகைய ஊடுகதிகள், அண்டவெளியில் நிகழும் வானியல்  செயல்முறைகளுடன் தொடர்புடைய, ஆற்றல்மிக்க, அரிதான எக்ஸ்-கதிர் மின்னல்கள் ஆகும். இவை வானில் தோன்றும் ஒரு புதிய வகை நிலைமாற்ற மூலங்கள் ஆகும். இவை பத்தாண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் கண்டறியப்பட்டன. இந்த புதிரான நிகழ்வுகள், குறைந்த ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்களின் வெடிப்புகளாகத் தோன்றி, சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடித்து, பின்னர் பார்வையில் இருந்து வேகமாக மறைந்துவிடுகின்றன.

இவை குறுகிய காலம் மட்டுமே நீடிப்பதால், இந்தக் கதிர்கள் குறித்த ஆய்வு நீண்ட காலமாக சவாலானப் பணியாக இருந்து வருகிறது, இதனால் அவற்றின் தோற்றம் நிச்சயமற்றதாகவே உள்ளது. பல ஆண்டுகளாக, இந்த மர்மமான கதிர்களை விளக்க வானியலாளர்கள் பல சாத்தியமான வழிமுறைகளை முன்மொழிந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275128&reg=3&lang=1

***

(Release ID: 2275128)

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2275666) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी