பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொது மற்றும் டிஜிட்டல் நிர்வாகத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா- தென் கொரிய நாடுகள் மீண்டும் உறுதி
प्रविष्टि तिथि:
20 JUN 2026 1:19PM by PIB Chennai
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு யுன் ஹோஜங், மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில், டிஜிட்டல், மின்னணு நிர்வாகம், பொது நிர்வாகம், திறன் மேம்பாடு, மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாக்கப்பட்டது.
இரு தலைவர்களும் தங்களது பிரதிநிதிகள் குழுக்களுடன், பல்வேறு அம்சங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
தென் கொரியப் பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பொதுவான ஜனநாயக விழுமியங்கள், புத்தாக்கம், நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இரு நாடுகளும் சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பைப்' பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது இறுதி செய்யப்பட்ட 'கூட்டு உத்திசார் தொலைநோக்கு அறிக்கை' குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் டிஜிட்டல் ஆளுகை, பொதுச் சேவை வழங்கல், குறைதீர்ப்பு வழிமுறைகள் ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்தியா - கொரியா ஆகிய இரு நாடுகளும் பகிரப்பட்ட விழுமியங்கள், பாரம்பரியம், சட்டத்தின் ஆட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஜனநாயக நாடுகள் என்று மத்திய அமைச்சர் கூறினார். "வரலாற்றுச் சிறப்புமிக்க, எதிர்கால இலக்குகளுடன் கூடிய சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பில், ஆசியாவின் இரண்டு முக்கியப் பொருளாதார சக்திகளாக திகழ்வதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275600®=3&lang=1
(Release ID: 2275600)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2275659)
आगंतुक पटल : 8