வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் மாநில மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு

प्रविष्टि तिथि: 19 JUN 2026 3:06PM by PIB Chennai

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ராஞ்சியில் இன்று ஆய்வு நடத்தினார்.

மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்தவும், மின்கட்டமைப்பில் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் விரிவான செயல் திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். அரசுத் துறைகளின் மின்கட்டண நிலுவைத் தொகை பிரச்சனையைத் தீர்க்க வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அரசு நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் கணக்கீட்டு மீட்டர்களை 2026 ஆகஸ்ட் 31-க்குள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் முறைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துமாறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தினார்.

பழங்குடியின கிராமங்களின் வீடுகளுக்கான மின்மயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தினார். பிரதமரின் சூரிய மேற்கூரை மின்சாரத் திட்டத்தின் கீழ் அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி பேனல்களை முன்னுரிமை அடிப்படையில் நிறுவவும், அதற்கான இலக்குகளை விரைந்து எட்டவும் மாநில அரசை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275135&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2275401) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी