மத்திய பணியாளர் தேர்வாணையம்
யுபிஎஸ்சி-ன் புதிய அலுவலகம் புதுதில்லியில் திறந்து வைக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUN 2026 2:32PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய அலுவலகத்தை புதுதில்லியில் உள்ள தால்கடோரா இணைப்பு கட்டிடத்தில் ஆணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் இன்று திறந்து வைத்தார்.
அதிகரித்து வரும் இடத் தேவைகள், ஆணையத்தின் பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அஜய் குமார், தேர்வாணையத்தின் பொறுப்புகள் சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதால் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது என்றார்.
தோல்பூர் ஹவுஸ் தலைமையகத்தில் நிரந்தர வசதிகள் உருவாக்கப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாகச் சில அலுவலகங்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த கூடுதல் அலுவலக இடம் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, தேர்வாணையத்தின் அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றவும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275113®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2275398)
வருகையாளர் எண்ணிக்கை : 53