நாளைய படைப்பாற்றல், சிந்தனைகள் என்ற தலைப்பில் இளம் இயக்குநர்களின் 9 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது
மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் நாளைய படைப்பாற்றல், சிந்தனைகள் என்ற தலைப்பில் குறும்படங்களின் தொகுப்பு திரையிடப்படுகிறது. இதில் நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள இளம் இயக்குநர்களின் படைப்பாற்றல், கற்பனைத் திறன், கதை சொல்லும் திறன் ஆகியவற்றைப் போற்றும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இந்தப் பிரிவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 குறும்படங்களும் தொழில்நுட்பம், உறவுகள், அடையாளம், மனநலம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை ஆய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளன. அர்ஷாலி ஜோஸ் இயக்கிய குல்லு திரைப்படம் கோவாவில் தனது தொலைபேசியைத் தொலைத்த குல்சென், சலீம் என்ற ஓட்டுநர் மூலம் எதிர்பாராதவிதமாக ஞானத்தையும் ஆறுதலையும் பெறுவதை எடுத்துரைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சூரியான்ஷ் தியோ ஸ்ரீவத்சவா இயக்கிய “ஹே மாயா” திரைப்படத்தில் ஒரு இளம் ஜோடி தங்கள் காதலை ஆழப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப ஆலோசகர்களை நாடுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2275283®=3&lang=1
***
TV/SV/KPG/SH
रिलीज़ आईडी:
2275384
| Visitor Counter:
8