பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வூதிய நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய 12 ஆண்டுகால சீர்திருத்தங்கள்
प्रविष्टि तिथि:
19 JUN 2026 3:42PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஓய்வூதியம் சார்ந்த சேவைகளை எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் வெளிப்படையாகவும் மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றியமைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியா, எளிதான வாழ்வியல் முறை போன்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறை, நாடு முழுவதிலுமுள்ள ஓய்வூதியதாரர்கள் குறித்த தருணத்தில் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த சீர்த்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய சாதனைகளாகும். கடந்த 2014-ம் ஆண்டு ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டில் முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக ஸ்மார்ட் போன் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வழி வகுத்துள்ளது. மேலும் ஓய்வூதியர்கள் நலத்துறை 2022-ம் ஆண்டு முதல் 4 முறை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275162®=3&lang=1
***
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2275378)
आगंतुक पटल : 10