சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் புதிய ஆதார் சேவை மையத்தை புதுச்சேரி முதல்வர் திரு என். ரங்கசாமி திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 9:35PM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ, புதுச்சேரியில் தனது முதல் ஆதார் சேவை மையத்தை இன்று (18.06.2026) செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது. நகரில் மக்களை மையமாகக் கொண்ட ஆதார் சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இந்த யுஐடிஏஐ ஆதார் சேவை மையத்தை புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில், கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு அழகானந்தம், புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறை ஆணையரும், செயலாளருமான திரு சௌத்ரி முகமது யாசின், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு ஏ. குலோத்துங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், யுஐடிஏஐ பெங்களூரு மண்டல அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி அன்னி ஜாய்ஸ். வி, இயக்குநர் திரு பவன் குமார் பஹ்வா, உதவி மேலாளர் திரு வெங்கட் பானு பிரசாத் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  

ஆதார் சேவை மையத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மற்றும் மையத்தின் பணியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். மேலும், பொதுமக்களுக்கு ஆதார் சேவைகள் திறம்பட வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் பின்பற்றப்படும் ஆதார் பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் நடைமுறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பயோ மெட்ரிக் விவர புதுப்பிப்பு, குழந்தைகளுக்கான ஆதார் பதிவு, ஆதார் செயலி மற்றும் ஆவணப் புதுப்பிப்பு உள்ளிட்ட முக்கிய ஆதார் சேவைகள் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், ஆதார் விழிப்புணர்வு தொடர்பான தொடர் காணொலிகளை முதலமைச்சர் வெளியிட்டார். பல்வேறு மொழிச் சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும், பரவலாகச் சென்றடையும் வகையிலும் இந்தக் காணொலிகள் ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் விவரப் புதுப்பிப்புகள் 2026 செப்டம்பர் 30 வரை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த சேவையைப் புதுச்சேரியில் உள்ள ஆதார் சேவை மையங்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்கள் மூலம் பொது மக்கள் அணுகலாம்.

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2275034) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English