குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஹரியானாவின் சிவானியில் நடைபெற்ற காதி வேலைவாய்ப்பு திருவிழாவில் கைவினைஞர்களுக்கு 3,645 எந்திரங்களும் கருவிகளும் வழங்கப்பட்டன
प्रविष्टि तिथि:
18 JUN 2026 11:55AM by PIB Chennai
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானியில் 'காதி வேலைவாய்ப்பு திருவிழா' புதனன்று (17.06.2026) நடைபெற்றது. 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047', 'தற்சார்பு இந்தியா', 'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு', மற்றும் 'உள்ளூர் முதல் உலகம் வரை' ஆகிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைகளை நனவாக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி தலைமை விருந்தினராகவும், காதி, கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் கோயல் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், கிராமத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஹரியானா, நாடு முழுவதிலுமிருந்து 972 கைவினைஞர்களுக்கு 3,645 நவீன எந்திரங்களும் கருவிகளும் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274418®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2274848)
आगंतुक पटल : 7