மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 7:50AM by PIB Chennai
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார், 2026, ஜூன் 17 அன்று மதுராவில் உள்ள உத்தரப் பிரதேச பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பசு சிகிச்சை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பசு ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார்.
இந்தப் பயணத்தின் போது, பல்கலைக்கழகத்தின் தற்போதைய கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், கால்நடை மேம்பாட்டுச் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். கால்நடை மருத்துவ கற்பித்தல் வளாகம், கால்நடைப் பண்ணை வளாகம், பல்வேறு மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் பயிற்றுவிப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை திரு கங்வார் பார்வையிட்டார். பல்கலைக்கழகத்தின் ஆடுகளுக்கான சிறப்புப் பிரிவையும் பார்வையிட்ட அவர், அங்கு மேம்பட்ட இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க உயிரித் தொழில்நுட்பத் திட்டங்களை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். கால்நடை மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற தேசிய இயக்கத்தின் கீழ் வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் இயக்கத்தில் திரு கங்வார் பங்கேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274375®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2274815)
आगंतुक पटल : 8