பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தை விரைவுபடுத்த சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 5:02PM by PIB Chennai
'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற உன்னதமான இலக்கை அடைவதே நமது நாட்டின் தற்போதைய முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தப் பயணத்தை விரைவுபடுத்த, மத்திய அரசு மேற்கொண்டு வரும் மிகச் சிறந்த நிர்வாகச் சீர்திருத்தங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, நிர்வாகத்தை வெறும் கோப்புகளையும் நடைமுறைகளையும் கையாளும் ஒரு பணியாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக நிர்வாகத்தை மாற்றியுள்ளது.
முன்பு பல மாதங்கள் எடுத்த குறைகளுக்கான தீர்வுகள், இன்று நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு சராசரியாக 13 நாட்களில் வழங்கப்படுகின்றன.
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் நேர்காணல் முறையை நீக்கி, தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவது ஒரு முக்கியமான சீர்திருத்தமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274079®=3&lang=1
செய்தி அடையான எண்:2274079
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2274334)
आगंतुक पटल : 9