ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நில மேலாண்மை சீர்திருத்தங்கள்: உலக வங்கியுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு உறுதிப்பாடு
प्रविष्टि तिथि:
16 JUN 2026 6:43PM by PIB Chennai
மத்திய நிலவளத் துறைச் செயலாளர் திரு நரேந்திர பூஷன், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவுடன் புதுதில்லியில் இன்று கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் இருதரப்பு உயர் அதிகாரிகள், துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் மிக முக்கிய சொத்தாக உள்ள நிலங்கள், விவசாய உற்பத்தித் திறன், கிராமப்புற மேம்பாடு, நிதி உள்ளடக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று செயலாளர் குறிப்பிட்டார். சொத்துரிமைகளைப் பாதுகாக்கவும், கடனுதவிகளை எளிதாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் நவீன, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த நில நிர்வாக முறைகள் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
மாநிலங்களின் நில நிர்வாகச் சீர்திருத்தங்களை மதிப்பிடுவதற்கு தனித்துவமான கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உலக வங்கி பிரதிநிதிகள் டிஜிட்டல் நில ஆவணங்கள், சொத்து மேலாண்மை, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டனர். வெளிப்படையான நில நிர்வாக அமைப்புகளை ஊக்குவிக்க உலக வங்கியுடன் இணைந்து பணியாற்ற மத்திய நிலவளத் துறை விருப்பம் தெரிவித்தது. வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்த முக்கிய உத்திசார் கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273675®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2274258)
आगंतुक पटल : 4