பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ் செஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
17 JUN 2026 4:44PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தர்காஷ், செஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகத்தில் தமது பயணத்தை நிறைவு செய்து 2026 ஜூன் 15 அன்று அங்கிருந்து புறப்பட்டது.
இப்பயண காலத்தில், இந்தியாவுக்கும், செஷெல்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் கடல்சார் கூட்டாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில், இக்கப்பல் தொடர்ச்சியான தொழில்முறைப் பரிமாற்றங்கள், சமூக நலப்பணிகள், தூதரக ஈடுபாடுகளை மேற்கொண்டது. 2026 ஜூன் 13 அன்று இக்கப்பலில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை இந்தியப் வம்சாவளியினர், உள்ளூர் சமூகத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இது அவர்களுக்குக் கப்பல் பணியாளர்களுடன் உரையாடுவதற்கும், இந்தியக் கடற்படையின் பங்களிப்பு, திறன்கள் குறித்த புரிதலைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. கப்பலின் மருத்துவக் குழு, உள்ளூர் சமூகத்தின் முதியோர்களுக்காக ஒரு மனிதாபிமான நலப்பணித் திட்டத்தை நடத்தியது. இதில் முதலுதவி, அடிப்படை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்களையும் வழங்கியது.
மாலை நேரத்தில் கப்பலில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில், செஷெல்ஸ் துணை அதிபர் திரு அலிக்ஸ் செபாஸ்டியன் பிள்ளை, தூதரக உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274061®=3&lang=1
****
TV/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2274251)
आगंतुक पटल : 51