மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மகாராஷ்டிராவில் 14 கோடி பேர் மகாராஷ்டிரா குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் அணுகலாம்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:28PM by PIB Chennai
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 14 கோடி பேர் தற்போது தங்களுடைய மஹாசாரதி என்ற குடும்ப அடையாள விவரங்களை டிஜிலாக்கர் மூலம் அணுகலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஆவணப் பெட்டகமான இதில் இந்தச் சேவை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சரிபார்ப்பு, சேவைகளைப் பெறுதல் போன்ற தேவைகளுக்கு, மக்கள் தங்கள் குடும்ப அடையாள அட்டையை எப்போது வேண்டுமானாலும் பெற்றுப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியும்.
இந்த ஒருங்கிணைப்பு இரு வழிகளிலும் செயல்படுகிறது. மக்கள் ஏற்கனவே உள்ள தங்களின் மஹாசாரதி குடும்ப அடையாள அட்டை விவரங்களை டிஜிலாக்கரில் சேமிக்கலாம். அதேபோல், டிஜிலாக்கர் மஹாசாரதி அமைப்போடு இணைக்கப்பட்டுள்ளதால், புதிய குடும்ப அடையாள அட்டைக்கு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும், அதற்கான ஒப்புதலைச் செயலிக்குள்ளேயே வழங்கவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273958®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2274179)
आगंतुक पटल : 9