ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்டப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, விரைவாக பழுது கண்டறிதல் போன்ற கிழக்கு ரயில்வேயின் சிக்னல் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 1:55PM by PIB Chennai

நவீன சிக்னல் உள்கட்டமைப்பு வசதிகள், வலுவான பாதுகாப்பு அம்சங்களுக்கான முக்கிய நடவடிக்கையாக,  கிழக்கு ரயில்வேயில் உள்ள  32 ரயில் நிலையங்களில், தற்போதைய இணைப்பு அமைப்புகளுக்கு மாற்றாக, மின்னணு முறையிலான இணைப்பு வசதிகளை அமைப்பதற்கான ரூ.405 கோடி மதிப்பிலான சிக்னல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், அதிக அடர்த்தி கொண்ட கட்டமைப்பு, அதிக பயன்பாட்டில் உள்ள ரயில்  வழித்தடங்களில், 25 பேனல் இன்டர்லாக்கிங் /ரூட் ரிலே இன்டர்லாக்கிங் நிலையங்களும், 7 இடைநிலை பிளாக் சிக்னலிங் இடங்களும் அடங்கும்.

முக்கிய வழித்தடங்களில், சிக்னல் அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கும், ரயில் வழித்தடம் முழுவதும் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இந்திய ரயில்வே வகுத்துள்ள விரிவான உத்திசார் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடங்களில் தற்போதுள்ள பல சிக்னல் அமைப்புகள், பழைய ரிலே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. அவை  பழுதடைந்த உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக செயல்பாட்டுக் கட்டுப்பாடு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. காலாவதியான மின் விநியோக ஏற்பாடுகள், முறையற்ற புவி இணைப்பு அமைப்புகள், பழுதடைந்த சமிக்ஞை உபகரணங்கள் போன்ற சிக்கல்கள், அதிக பராமரிப்புத் தேவைகளுக்கும், செயலிழப்பு அபாயங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளன.

இந்தத் திட்டம், அதிநவீன மின்னணு இணைப்பிற்கான தொழில்நுட்பத்துடன் அதிக நம்பகத்தன்மை, மேம்பட்ட பாதுகாப்பு, விரைவான பழுது கண்டறியும் திறன்களை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273933&reg=3&lang=1

 

***

SS/SV/SH

 


(रिलीज़ आईडी: 2274168) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada