நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்கள் குறித்த விளக்கம் மும்பையில் ஜூன் 18 அன்று நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
17 JUN 2026 12:42PM by PIB Chennai
இந்தியாவின் நிலக்கரி வாயுவாக்கல் இயக்கத்தில் பங்குதாரர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கவும், தொழில்துறை பங்களிப்பை விரைவுபடுத்தவும் நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பது தொடர்பான 3-வது முகாமை மும்பையில் ஜூன் 18 அன்று ஏற்பாடு செய்துள்ளது. நிலக்கரி வாயுவாக்கலில் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும், நிலக்கரி வளங்களை தூய்மையாக்கவும், அத்துடன் நீடித்த முறையில் பயன்படுத்துவதற்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவு அளிக்கவும், முன்னணி தொழிற்துறை பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், கொள்கை நிபுணர்கள், நிலக்கரித்துறை பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள், மாநில அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோரை இது ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, தலைமை விருந்தினராகவும், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273895®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2273973)
आगंतुक पटल : 7