அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-இன் ஏழு தொழில்நுட்பங்களின் உரிமம் தொழில்துறைக்கு வழங்கப்பட்டன
प्रविष्टि तिथि:
16 JUN 2026 7:26PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), புதுதில்லியில் உள்ள தனது தலைமையகத்தில் இன்று 'தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் இந்திய சான்றளிக்கப்பட்ட குறிப்பு ஆவணம் (Bharatiya Nirdeshak Document -BND) வெளியீட்டு விழா'வை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள், தொழில் துறையின் கூட்டாளிகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் முக்கியப் பங்குதாரர்கள் ஒன்றிணைந்தனர். சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR-NPL) மற்றும் சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CRRI) ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், ஏழு தொழில்நுட்பங்களின் உரிமங்கள் தொழில் துறைக்கு மாற்றப்பட்டன; பத்து இந்திய இயக்குநருக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டன; மேலும் குவாண்டம் உணர்திறன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட முக்கியக் கூறுகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவிடம் ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியல் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி, தொழில்நுட்பப் பரிமாற்றம் என்பது வெறும் வணிகப் பரிவர்த்தனை மட்டுமல்ல, மாறாக தொழில் துறையுடனான கூட்டுறவின் மூலம் அறிவியல் ஆராய்ச்சியின் பலன்கள் சமூகத்தைச் சென்றடைவதே அதன் முக்கிய நோக்கம் என்று கூறினார். மேலும், வலுவான தொழில் துறை ஈடுபாடு, ஆராய்ச்சி முடிவுகளை வணிகமயமாக்குதல் மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் சிஎஸ்ஐஆர் உறுதியுடன் உள்ளது என்றும் அவர் வலியுறுகதினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273706®=3&lang=1
(Release ID: 2273706)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2273779)
आगंतुक पटल : 12