இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி மும்பையின் புகழ்பெற்ற வொர்லி கடற்கரையில் ஃபிட் இந்தியா சைக்ளோத்தான் பேரணியை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
16 JUN 2026 3:45PM by PIB Chennai
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுவதையொட்டி மும்பையில் புகழ்பெற்ற வொர்லி கடற்கரை பகுதியின் சைக்கிள் பாதையில் சிறப்பு ஃபிட் இந்தியா சைக்ளோத்தான் பேரணியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை காலை தொடங்கி வைக்கிறார். காலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சுமார் 250 பேர் அமைச்சருடன் இணைந்து பயணிக்க உள்ளனர். ஆரோக்கியத்தை வாழ்க்கை முறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ‘ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் பயணம்’ என்ற முன்முயற்சியை கடந்த ஓராண்டாக டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நாட்டின் 3 லட்சத்துக்கும் அதிகமான பகுதிகளிலிருந்து 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை சென்றடைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273547®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2273682)
आगंतुक पटल : 11