பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓவின் நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:31PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, இன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணையின் (LRLACM) சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து பல்வேறு கண்காணிப்புக் கருவிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, சோதனையின் அனைத்து நோக்கங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணை என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ஏவுகணையாகும். இதன் அனைத்துத் துணை அமைப்பு முறைகளும் பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் இந்தியத் தொழில் துறை கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் நிறுவனம் இதன் முதன்மை ஆய்வகமாகச் செயல்படுகிறது. ஏவுகணையின் சோதனை நிகழ்வை டிஆர்டிஓவின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.
ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக, டிஆர்டிஓ குழுவினருக்கும் தொழில் துறை கூட்டாளிகளுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்தார். சோதனையின் அனைத்து செயல்பாடுகளையும் பாதுகாப்புத் துறைச் செயலாளரும், டிஆர்டிஓவின் தலைவருமான திரு ராஜேஷ் குமார் சிங் கண்காணித்தார். இந்த வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273160®=3&lang=1
(Release ID: 2273160)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2273284)
आगंतुक पटल : 27