மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தகவல் தொழில்நுட்பத் துறையின் செயற்கை நுண்ணறிவு மாற்றம்: அரசுடன் தொழில் துறை ஆலோசனை

प्रविष्टि तिथि: 15 JUN 2026 7:03PM by PIB Chennai

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை, செயற்கை நுண்ணறிவு  சார்ந்த சேவைகளாக மாற்றுவது குறித்து கேரள மாநிலம் கொச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அமைச்சகத்தின் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை, மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பு ஒருங்கிணைத்தது.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய எஸ். கிருஷ்ணன், "செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகரிப்பதால் வேலைவாய்ப்பு குறையும் என்ற அச்சத்தை விடுத்து, புதிய திறன்களை வளர்த்தல், தற்போதைய பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உலகிற்குத் தேவையான அதிக அளவிலான பயிற்சி பெற்ற பணியாளர்களை வழங்குவதே இந்தியாவின் இலக்காக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உலக சந்தையில் இந்திய நிறுவனங்களின் போட்டித்தன்மையை நிலைநிறுத்தவும், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் விவாதித்தது. இது இந்தியாவின் 'இந்தியா ஏ.ஐ'  திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273180&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273180

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273283) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी