பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பெருநிறுவனங்கள் துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாட்டை ஐஐசிஏ நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 5:02PM by PIB Chennai
மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ (IICA), “இந்தியாவின் பெருநிறுவன மறுசீரமைப்புச் சூழல் : பத்து ஆண்டு கால அனுபவம் – எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டை அண்மையில் புது தில்லியில் நடத்தியது.
தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவரும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான நீதிபதி அசோக் பூஷன், பட்டமளிப்பு விழா உரையாற்றினார். கடந்த பத்து ஆண்டுகளில் திவால், நொடித்தல் சட்டத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை எடுத்துரைத்தார்.
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவால் சிறப்புரையாற்றினார். சரியான நேரத்தில், அதிகபட்ச மதிப்பை வழங்கும் தீர்வு முடிவுகளை உறுதி செய்ய, தொடர்ச்சியான நீதித்துறை மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் திவால்நிலை, மறுசீரமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், சீர்திருத்தங்களின் அடுத்த கட்டத்திற்கான ஒரு தொலைநோக்கு செயல் திட்டத்தை வகுப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கூட்டு உறுதிப்பாட்டை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273065®=3&lang=1
(Release ID : 2273065)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2273241)
வருகையாளர் எண்ணிக்கை : 48