குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பீகார் மாநிலம் கயாஜியில் தொழில்நுட்ப மையத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சி, முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி அடிக்கல் நாட்டினார்கள்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:35PM by PIB Chennai
பீகார் மாநிலம் கயாஜியில் உள்ள கிசார்சராயில் அமைக்கப்பட உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு மத்திய குறு,சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சியும், முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரியும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.
அப்பகுதியில் குறுசிறு நடுத்தர தொழில்துறை சூழல், தொழில்துறை உட்கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு மிக்க இத்திட்டம், பாரம்பரிய பூமி பூஜையுடன் தொடங்கியது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சி, இந்த மையத்தில் குறுகிய கால, நீண்டகால பயிற்சிகள் மூலம், ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273098®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2273179)
आगंतुक पटल : 9