தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லி, நொய்டா மெட்ரோ ரயில் வழித்தடங்களில் மொபைல் நெட்வொர்க் தர மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு
प्रविष्टि तिथि:
15 JUN 2026 2:52PM by PIB Chennai
நொய்டா, தில்லி ஆகிய நகரங்களின் மெட்ரோ வழித்தடங்களில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ஏப்ரல் 2026-ல் மொபைல் நெட்வொர்க் தொடர்பாக சோதனை நடத்தியது. அதன் முடிவுகள் தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதே இந்த நேரடிச் சோதனையின் நோக்கமாகும்.
இந்த சுதந்திரமான சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் செயல்திறன் போன்ற முக்கிய சேவைத் தர அம்சங்கள் தொடர்பாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை ட்ராய் பதிவு செய்தது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272941®=3&lang=1
***
(Release ID : 2272941)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2273141)
आगंतुक पटल : 9