பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வுக்கு முந்தைய கலந்தாய்வு பயிலரங்கு, வங்கியாளர்கள் விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை ஸ்ரீநகரில் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 3:23PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஓய்வுபெறும் மத்திய அரசுப் பணியாளர்களுக்காக ஓய்வுக்கு முந்தைய கலந்தாய்வுப் பயிலரங்கு, 13-வது வங்கியாளர்களின் விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றிற்கு, மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்களின் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது ஸ்ரீநகரில் 2026 ஜூன் 16 (நாளை) அன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார். ஓய்வூதியதாரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான எளிதான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையின் நடவடிக்கையாக இப்பயிலரங்கு நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அடுத்த 12 மாதங்களில் ஓய்வுபெற உள்ள சுமார் 300 மத்திய அரசுப் பணியாளர்கள் இம்முகாமில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272955®=3&lang=1
***
SS/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2273108)
வருகையாளர் எண்ணிக்கை : 49