தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேச மாநில அஞ்சல் துறையால் ட்ரோன் அடிப்படையிலான அஞ்சல் பட்டுவாடா சேவை தொடங்கப்படுவதாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு

प्रविष्टि तिथि: 13 JUN 2026 7:05PM by PIB Chennai

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு திட்ட தலைவருமான திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் தலைமையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தலைமை அஞ்சல் நிலையத்திற்கும், ரெஹர்தர் கிளை தபால் நிலையத்திற்கும் இடையே தபால், பார்சல்களை ட்ரோன் மூலம் அனுப்பும் சேவையை அஞ்சல் துறை 12 ஜூன் 2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற தபால் சேவகர்கள், உதவியாளர்களுடன் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா  கலந்துரையாடிய போது பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொலைதூர, கடினமான நிலப்பரப்புகளில் விரைவான, திறமையான தபால் சேவைகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு, இது போன்ற சேவைகளைத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அஞ்சல் சேவைகளை வலுப்படுத்த உதவிடும் வகையில்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சரின் தொலைநோக்குப் பார்வை பேரில், அஞ்சல் துறை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் இமாச்சலப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட 150 வழித்தடங்களில் ட்ரோன் அடிப்படையிலான அஞ்சல் பட்டுவாடாத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் மண்டி-ரெஹர்தார் வழித்தடத்தில், இந்த முயற்சி முதல்முறையாக செயல்படுத்துகிறது.

மண்டி தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரெஹர்தார் கிளை அஞ்சல் அலுவலகத்தை, வழக்கமான ஏற்பாடுகள் மூலம் சென்றடைய தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலான கால அவகாசம் தேவைப்படுகிறது. ட்ரோன் அடிப்படையிலான பரிமாற்றத்தின் மூலம், பயண நேரம் சுமார் ஏழு நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை, நிலப்பரப்பு தொடர்பான சவால்களைக் கடந்து, நிகழ்நேரக் கண்காணிப்பைச் சாத்தியமாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த  போக்குவரத்து முறையையும் வழங்குகிறது. இந்த முன்முயற்சி, சேவை வழங்கலை மேம்படுத்தவும், தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இணைப்பை வலுப்படுத்தவும், உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய அஞ்சல் சேவைகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் உதவுவதுடன், அதன் மூலம் விரிவான சமூக, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272527&reg=48&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2272808) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी