சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பில் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்காக, என்ஐஎஸ்டி - டாக்டர் ஆர்எஸ் டோலியா நிர்வாக அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 6:05PM by PIB Chennai
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சமூகப் பாதுகாப்பு (என்ஐஎஸ்டி) நிறுவனம், இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உத்தரகாண்டில் சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த கூட்டுத் திறன் மேம்பாட்டிற்காக, நைனிடாலில் செயல்படும் டாக்டர் ஆர்.எஸ். டோலியா உத்தரகாண்ட் நிர்வாக அகாடமியுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது.
சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், திரு சுதான்ஷ் பந்த், டாக்டர் ஆர்.எஸ். டோலியா உத்தரகாண்ட் நிர்வாக அகாடமியின் தலைமை இயக்குநர், திரு பி.பி. பாண்டே ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
போதைப்பொருள் தடுப்பு, மூத்த குடிமக்கள் பராமரிப்பு, மூன்றாம் பாலினத்தவர் நலன் ஆகியவை குறித்த பணிகளில் மாநில அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
***
(Release ID: 2272253)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272563)
आगंतुक पटल : 6