மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வு தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துகிறது: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 6:00PM by PIB Chennai

உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ந்து வரும் புத்தாக்கம், புத்தொழில் சூழல் அமைப்பைக் காட்சிப்படுத்தும் இரண்டு முக்கிய ஆவணங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். இதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர், கற்பவர்களாக இருக்கும் இந்தியர்களை அறிவை உருவாக்குபவர்களாகவும், புத்தாக்க சிந்தனையாளர்களாகவும், தொழில்நுட்பத் தலைவர்களாகவும் மாற்றுவதற்கான தேசிய கல்விக் கொள்கை 2020 இன் தொலைநோக்குப் பார்வையைபாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வு வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

பாரத் இன்னோவேட்ஸ் குறித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள புத்தொழில் நிறுவனங்கள், இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், தொழில்முனைவோர் மையங்கள், ஆராய்ச்சி அமைப்புகளில் இருந்து உருவாகி வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டின் உயர் கல்வித் துறையின் வளர்ந்து வரும் புத்தாக்கத் திறனைத் பிரதிபலிக்கிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், உயர் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, நிதி ஆயோக்கின் அடல் இன்னோவேஷன் மிஷன் இயக்குநர் திரு தீபக் பாக்லா, கல்வி அமைச்சகத்தின் தொழில்நுட்பக் கல்வித் துறையின் இணைச் செயலாளர் திருமதி சௌமியா குப்தா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272273&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2272438) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia