சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழுநோய் இல்லாத இந்தியாவிற்கான உத்திகளை வகுப்பது குறித்த பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUN 2026 5:06PM by PIB Chennai

தொழுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக தொழுநோய் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் முக்கிய நடவடிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் தொழுநோய் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான திட்டங்களை வகுப்பது, மதிப்பாய்வு செய்வது உள்ளிட்ட உத்திசார் நடவடிக்கைகள் குறித்த 2 நாள் மண்டல அளவிலான பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆராதனா பட்நாயக், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் திட்ட செயலாக்கத்தில் உள்ள தடைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணுதல், திறன் மேம்பாடு தகவல்களை பகிரந்து கொள்வது கல்வி போன்ற நடவடிக்கைகள் மூலம் திட்ட அமலாக்கத்தை விரைவுப்படுத்துவது போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தொழுநோய் குறித்த பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். தொழுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் அவர் கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் தொழுநோய் பாதிப்பு 50 சதவீதமாக உள்ளதென்றும் இந்தப் பாதிப்பைக் களைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொழுநோய் பாதிப்பை முற்றிலும் அகற்றுவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்றும் திட்டமிடல், கண்காணிப்பு, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற அம்சங்களில் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருமதி ஆராதனா பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272194&reg=3&lang=1   

***

TV/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2272244) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी