மருந்துகள் துறை
நவீன மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உயிரி மருந்துத் துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது: மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 7:21PM by PIB Chennai
நவீன மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உயிரி மருந்துத் துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று அசோசாம் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட '2-வது பார்மா உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2026' நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 'பயோபார்மா சக்தி' முன்முயற்சியின் கீழ், 2047-ம் ஆண்டிற்குள் 100 உயிரி மருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இது வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் தூய்மை இந்தியா ஆகிய இலக்குகளை அடைவதற்கு நேரடியாகப் பங்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மருந்துத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் தேவையான வலுவான நிதி மற்றும் கொள்கை சார்ந்த வழிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2031-ம் ஆண்டிற்குள் மருத்துவ சிகிச்சையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் சுமார் 40 சதவீதம் உயிரி மருந்துகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியா தனது பாரம்பரியமான மலிவு விலை மருந்துத் தயாரிப்புத் திறனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதோடு, புதிய தலைமுறை உயிரி மருந்துத் தயாரிப்பிலும் முன்னிலை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271807®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2272072)
आगंतुक पटल : 4