அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் ஆராய்ச்சி மீதான மதிப்பு, சமூக, பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் திறனில் உள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 5:40PM by PIB Chennai

அறிவியல் ஆராய்ச்சி மீதான மதிப்பு, சமூக, பொருளாதார ரீதியான  தாக்கத்தை ஏற்படுத்தும் திறனில் உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஐஐடி காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, அரசுக்கு இடையேயான பயனுள்ள ஒத்துழைப்பு மூலம், புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களிலிருந்து களப்பயன்பாட்டிற்குத் தடையின்றிச் செல்லும் வலுவான சூழலமைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சிக்கான நடைமுறைத் தீர்வுகளாக அதிநவீன ஆராய்ச்சிப் பணிகள் அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மத்திய கருவியியல் வசதி) மற்றும் மூன்று புதிய ஆராய்ச்சித் தொகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். மேம்பட்ட பொருட்களுக்கான ஆராய்ச்சித் தொகுப்பு, எரிசக்தி ஆராய்ச்சித் தொகுப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்ப ஆராய்ச்சித் தொகுப்பு ஆகியவை இதில் அடங்கும்.

தொழில்துறை, கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், 70 தொழில் நிறுவனங்கள், இதில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு, தூய்மையான எரிசக்தி உற்பத்தி, குறைந்த செலவில் சுகாதார வசதிகள் ஆகிய அம்சங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தொடர் முயற்சிகள் தேவை என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271722&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2272058) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati