வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஜூன் 12-13, 2026 தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 5:50PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், அரசுமுறைப் பயணமாக 2026 ஜூன் 12 அன்று சுவிட்சர்லாந்து செல்கிறார்.

அவரது இந்தப் பயணத்தின்போதுபெர்ன் நகரில்,சுவிஸ்சர்லாந்து அரசின் உயர்நிலைப் பிரதிநிதிகள், அந்நாட்டு மருந்து துறை சார்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சுவிட்சர்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய வர்த்தக சங்க நாடுகளுடனான பொருளாதார உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை அவரது இந்தப் பயணம் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இந்தியா மற்றும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள சுவிட்சர்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 2025-ல் நடைமுறைக்கு வந்தது. வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்தப் பயணத்தின்போது, பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலாளர் திருமதி ஹெலன் பட்லிகர் ஆர்டிடா மற்றும் சுவிட்சர்லாந்தின்  அதிபர் திரு. கை பார்மெலின் ஆகியோரை திரு. கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், சுவிஸ் மருந்துத் துறையின் முன்னணிப் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடுகிறார். இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம், அது தொடர்பான செயல்பாட்டுச் சிக்கல்கலுக்குத் தீர்வு காண்பது, இருதரப்பு வர்த்தகம், முதலீடுநிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271739&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2272055) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati