வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-தஜிகிஸ்தான் வர்த்தகக் கூட்டுக் குழுவின் 12-வது கூட்டம்: பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அழைப்பு

प्रविष्टि तिथि: 10 JUN 2026 9:03PM by PIB Chennai

இந்தியா-தஜிகிஸ்தான் வர்த்தக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 12-வது கூட்டுக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்திய வர்த்தகத்துறை செயலர் திரு. ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவை, வலுவான பொருளாதார உறவாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில், தஜிகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 27.23% அதிகரித்து 58.12 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

மருந்துத் துறை, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய உடன்படிக்கை  கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271366&reg=48&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272033) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी