அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, உயிரி உற்பத்தியை மேற்கொள்வது குறித்த இணையவழிக் கருத்தரங்கை, உயிரி தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 4:23PM by PIB Chennai
2026-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, உயிரி உற்பத்தி சார்ந்த நடைமுறைகளை மேற்கொள்வது குறித்த இணையவழிக் கருத்தரங்கை இத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில், உயிரி உற்பத்தி, பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் தன்மையுடன் கூடிய தீர்வுகள், நீடித்த வளர்ச்சி ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் கவனம் செலுத்தும் அம்சங்களும் இதில் இடம் பெற்றன.
இந்த இணையவழிக் கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றிய, உயிரி உற்பத்தி இயக்குநரகத்தின் விஞ்ஞானியும், தலைவருமான டாக்டர் சங்கீதா எம் கஸ்தூரே, புதுமை கண்டுபிடிப்புகளால் உத்வேகம் பெற்று, நீடித்த உயிரி தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் உயிரி உற்பத்திக்கானச் சூழலமைப்பை வலுப்படுத்துவதில், இத்துறையின் தொடர் முயற்சிகள் குறித்த கண்ணோட்டத்தை விவரித்தார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் சாகுபடிக்கான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல், நிலையான எரிபொருள் பயன்பாடு, ரசாயனங்கள், உயிரிப் பொருட்கள், பிற உயிரி சார்ந்த தயாரிப்புகளுக்கான உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை மேம்படுத்துவதே பயோஇ3 என்ற கொள்கையின் தொலைநோக்குப் பார்வை என்பதை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269311®=3&lang=2
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2272011)
आगंतुक पटल : 15