சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய மருந்தியல் மாநாடு 2026: மருந்துகளின் தரத்தை மேம்படுத்துவதில் மருந்தியல் தரநிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
प्रविष्टि तिथि:
11 JUN 2026 12:07PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான இந்திய மருந்தியல் ஆணையம், தேவ்பூமி மருந்துகள் தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து மருந்தியல் தரநிலைகள், ஒழுங்குமுறைகள் மூலம் மருந்துகள் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த அறிவியல் மாநாட்டை ஹரித்வாரில் நடத்தியது. மருந்து உற்பத்தித் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தரநிலைகள் முறையாக பின்பற்றப்படுவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்வதில் மருந்தியல் தரநிலைகளை திறம்பட பின்பற்றும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் திகழ்கிறது. மருந்து உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இம்மாநாடு உதவியது.
தொழில்துறையினர், தரக் கட்டுப்பாட்டு வல்லுநர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், பகுப்பாய்வு விஞ்ஞானிகள் இம்மாநாட்டில் பங்கேற்று மருந்தியல் தரநிலைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். இம்மாநாட்டில் முதன்மை விருந்தினராக் கலந்துகொண்ட இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் வி கலைச்செல்வன் உரையாற்றுகையில், மருந்துகளுக்கான அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட தரநிலைகளை உருவாக்குவதில் இந்திய மருந்தியலின் முக்கியப் பங்கை விளக்கினார். இம்மாநாடு மருந்து உற்பத்தியில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271509®=3&lang=1
***
SS/PD
(रिलीज़ आईडी: 2271605)
आगंतुक पटल : 12