மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுவ சங்கம் என்னும் இளைஞர் இணைப்புத் திட்டம் - திரிபுரா பிரதிநிதிகள் ஹரியானா சென்றனர்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 5:30PM by PIB Chennai

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வித் துறை, ஒரே பாரதம் உன்னத பாரதம் முன்முயற்சியின் கீழ் யுவ சங்கம் எனப்படும் இளைஞர் இணைப்புத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே கலாச்சாரப் பரிமாற்றம், அனுபவக் கற்றல், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இளைஞர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் திரிபுராவிலிருந்து ஒரு குழுவினர், ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சென்றனர். இந்தக் குழுவினர், 2026 ஜூன் 4-ம் தேதி சண்டிகரில் உள்ள லோக் பவனில், ஹரியானா ஆளுநர் பேராசிரியர் ஆசிம் குமார் கோஷுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

திரிபுரா குழுவினர், முந்தைய இளையோர் இணைப்புத் திட்டப் பங்கேற்பாளர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குருக்ஷேத்ராவில் உள்ள என்ஐடியில் இளைஞர் இணைப்புத் திட்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஹரியானாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் மரபுகளையும் எடுத்துக்காட்டும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

2026 ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் மரம் நடும் இயக்கம், வினாடி வினாப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலுப்படுத்தினர். இந்த இளைஞர் இணைப்பு, 2026 ஜூன் 8 அன்று நடைபெற்ற நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது.

யுவ சங்கம் என்ற திட்டமானது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  விழுமியங்களை ஊக்குவிப்பதோடு, பரஸ்பர புரிதல், பண்பாட்டைப் போற்றுதல், இளைஞர் ஈடுபாட்டை வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271216&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2271444) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी