ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் மணிப்பூர், பீகார் மாநிலங்களுடன் சீர்திருத்தம் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 6:09PM by PIB Chennai

நாடு முழுவதும் நீடித்த, உறுதியான, மக்களை மையமாகக் கொண்ட கிராமப்புற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் மணிப்பூர், பீகார் மாநிலங்களுடன், சீர்திருத்தம் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

இந்தச் சீர்திருத்தம் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் நோக்கங்களுக்கு ஏற்ப, கிராமப்புற பஞ்சாயத்து அமைப்பு தலைமையில், சேவை, சமூகத்தை மையமாகக் கொண்ட கிராமப்புற நீர் நிர்வாக நடைமுறையை வலியுறுத்துகிறது. வலுவான சமூகப் பங்கேற்பு நடவடிக்கைகள் மூலம், ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும், போதிய அளவு, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில், குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நீண்டகால நீர் பாதுகாப்பிற்கும் இது பங்களிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், குடிநீர், சுகாதாரத் துறையின் செயலாளர் திரு அசோக் கே.கே. மீனா, ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளரும், இந்த இயக்கத்தின் இயக்குநருமான திரு கமல் கிஷோர் சோன், பிற மூத்த அதிகாரிகள் (கூட்டுச் செயலாளர் மற்றும் இயக்குநர் நிலை அதிகாரிகள்) ஆகியோர் உடனிருந்தனர்.

மணிப்பூர் மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், மணிப்பூர் மாநில அமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷன் சவுத்ரி,பீகார் மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறை அமைச்சர் திரு சஞ்சய் குமார் சிங் ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக நடைபெற்ற  கூட்டங்களின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271258&reg=48&lang=1

                                                          ***              

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2271414) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी