இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பூமா எஸ்இ நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை அன்காட் ஹோல்டிங் என்ற ஜெர்மனி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2026 4:54PM by PIB Chennai

பூமா எஸ்இ நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை அன்காட் ஹோல்டிங் என்ற ஜெர்மனி நிறுவனம் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வர்த்தக நிறுவனங்களின் இணைப்புத் திட்டத்திற்குஇரண்டாம் நிலை பங்கு கொள்முதல் மூலம் பூமா எஸ்இ நிறுவனத்தின் வெளியிடப்பட்டபங்குச் சந்தையில் புழக்கத்தில் உள்ள பங்கு மூலதனத்தில் 29.06% பங்குகளை அன்காட் ஹோல்டிங் என்ற ஜெர்மனி நிறுவனம் கொள்முதல் செய்வதன் வாயிலாக முதலீடு செய்கிறது. அன்காட் ஹோல்டிங் நிறுவனம் ஏஎன்டிஏ குழுமத்தின் மறைமுகமானதுணை நிறுவனமாகும்.

அன்காட் ஹோல்டிங் நிறுவனம் என்பது பங்குகளில் முதலீடு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் வேறு எந்தவொரு வர்த்தக  நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. ஏஎன்டிஏ நிறுவனம் முக்கியமாக காலணிகள்ஆடைகள்துணைப் பொருட்கள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களின் ஆராய்ச்சிமேம்பாடுவடிவமைப்புஉற்பத்திசந்தைப்படுத்தல்விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

பூமா நிறுவனம்விளையாட்டு வீரர்களுக்கான உடைகள்காலணிகளைத் தயாரிக்கும் ஒரு உலகளாவிய நிறுவனமாகும். இந்நிறுவனம் காலணிகள்ஆடைகள்துணைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுஅது சார்ந்த வாழ்க்கை முறை தயாரிப்புகளை வடிவமைத்தல்மேம்படுத்துதல்சந்தைப்படுத்துதல்விற்பனை செய்தல் ஆகியவற்றில் நேரடியாகவும்குழும நிறுவனங்கள் மூலமாகவும் ஈடுபட்டு வருகிறது.

ஆணையத்தின் இதற்கான விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

***

(Release ID 2271194)

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2271364) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी