தேசிய மனித உரிமைகள் ஆணையம்
டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை
प्रविष्टि तिथि:
09 JUN 2026 7:48PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், 'டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்' குறித்த திறந்த நிலை விவாதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.
இதற்குத் தலைமை தாங்கிய ஆணையத் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியம், சைபர் மோசடிகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் சுமார் ரூ. 52,976 கோடியை இழந்துள்ளதாகவும், இதில் டிஜிட்டல் கைது மோசடிகள் பெரும் பங்கு வகிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.
மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் பெயரைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பணத்தை மீட்டெடுக்கும் சட்ட நடைமுறைகள் சிக்கலானதாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், 'மியூல்' கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் நடப்பதைத் தடுக்கவும், நீண்ட கால ஓடிடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கவும் அவர் பரிந்துரைத்தார். டிஜிட்டல் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பது 'ராஜதர்மம்' என்று குறிப்பிட்ட ஆணைய உறுப்பினர்கள், இதற்கான நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி, டிஜிட்டல் மோசடிகளை எதிர்கொள்வதில் தற்போதைய நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஆக்கபூர்வமான விவாதங்கள், விரைந்து நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அமைச்சகங்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270875®=3&lang=1
செய்தி அடையான எண்:2270875
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2270935)
आगंतुक पटल : 16