பிரதமர் அலுவலகம்
பகவான் பிர்சா முண்டாவின் தியாக தினத்தில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
09 JUN 2026 1:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.06.2026), நிலத்தின் தந்தை (தர்த்தி ஆபா) பகவான் பிர்சா முண்டாவின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக, அவர் அந்நிய ஆட்சிக்கு எதிராக அசைக்க முடியாத துணிச்சலுடன் போராடினார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியின சமூகத்தின் சுயமரியாதை, கலாச்சாரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே தமது முழு வாழ்க்கையையும் அவர் அர்ப்பணித்ததாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்த அவரது வாழ்க்கை வரலாறு, இனிவரும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் தேசபக்தியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்."
***
(Release ID : 2270629)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2270871)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam