பாதுகாப்பு அமைச்சகம்
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் பாதுகாப்புத்துறை சார்பில் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
09 JUN 2026 1:22PM by PIB Chennai
காலியாக உள்ள பாதுகாப்புத்துறை நிலங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் உள்ள முன்னாள் ராணுவ முகாமில் சுமார் 850 ஏக்கர் காலி பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தில், பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்புடன் கூடிய 250 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவ பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்புத் துறை நிலத்தில் ஒருங்கிணைந்த ஒரு பெரிய அளவிலான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் இத்திட்டம், பாதுகாப்பு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் இவ்வகையான முதல் திட்டமாகும்.
இந்தத் திட்டமானது, தூய்மையான எரிசக்தி, நிலைத்தன்மை, மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றில் அரசின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இத்திட்டம், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையகம், பாதுகாப்பு சொத்துகளுக்கான பொது இயக்குநரகம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும். இத்திட்டம், தேசியப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை இணைந்த அம்சமாக விளங்குகிறது.
சீதாபூர் சூரிய மின்சக்தித் திட்டம், பாதுகாப்புத் துறை நிலத்தில் நிறுவப்படும் நாட்டின் மிக முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் ஒன்றாகத் திகழும். மேலும் இது பாதுகாப்புத் துறையில் எதிர்கால சூரியசக்தித் திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழும்.
(Release ID : 2270628)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2270835)
आगंतुक पटल : 9