சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தைச் செயல்படுத்தும் 36-வது மாநிலம் / யூனியன் பிரதேசமாக மேற்கு வங்கம் உருவெடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 08 JUN 2026 6:48PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான சுகாதார சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை அளிப்பதற்கும், ஒரு முக்கிய நடவடிக்கையாக, 'ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தைச் செயல்படுத்தும் 36-வது மாநிலம் / யூனியன் பிரதேசமாக மேற்கு வங்கம் உருவெடுத்துள்ளது. இந்த முன்னோடி சுகாதாரத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வரும் தேசிய சுகாதார ஆணையம், மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அம்மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுதாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரு. சுவேந்து அதிகாரி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்ரியா படேல், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி. புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் திரு. மனோஜ் குமார் அகர்வால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம், மேற்கு வங்க மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுனில் குமார் பர்ன்வால், மேற்கு வங்க மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர் திரு. நாராயண் ஸ்வரூப் நிகம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, இந்த முயற்சி மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டுமின்றி, 'அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு' என்ற இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என்று குறிப்பிட்டார்.

ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தில் இணைந்ததற்காக, மேற்கு வங்க மாநில அரசுக்கு வாழ்த்து தெரிவித்த திரு ஜே.பி. நட்டா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ், செப்டம்பர் 2018-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும், பின்னர் இது உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி பெறும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270375&reg=3&lang=1

(Release ID: 2270375)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2270492) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी