பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திறமை, கடின உழைப்பு, கல்வி மற்றும் கனிவான பேச்சு ஆகியவற்றின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 04 MAY 2026 8:19AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், திறமை, கடின உழைப்பு மற்றும் கருணை ஆகியவை நம் வாழ்வில் உள்ள அற்புதமான சக்திகள் என்று குறிப்பிட்டார். இவற்றின் மூலம், நாம் ஒவ்வொரு சவாலையும் வெல்வது மட்டுமல்லாமல், நமது இலக்குகளை அடைவதற்கும் அவை உதவியாக இருக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

திறமையானவர்களுக்கு எந்தப் பணியும் கடினமானதல்ல; கடினமாக உழைப்பவர்களுக்கு எந்த இலக்கும் எட்டாக் கனியல்ல; கல்வியறிவு பெற்றவர்களுக்குத், தங்கள் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை; மேலும், கனிவாகப் பேசுபவர்களுக்கு யாரும் அந்நியர் அல்ல என்று பிரதமர் மேலும் பகிர்ந்துகொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திறமைசாலிகளுக்கு எந்தக் காரியமும் கடினமானதல்ல; கடினமாக உழைப்பவர்களுக்கு எந்த இலக்கும் எட்டாக் கனியல்ல; கல்வி கற்றவர்களுக்குத் தங்கள் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை; மேலும், கனிவாகப் பேசுபவர்களுக்கு யாரும் அந்நியர் அல்ல என்று பொருள்படும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257707&reg=3&lang=1  

---

(Release ID: 2257707)

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2270407) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam