பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றத்தை விளக்கும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 MAY 2026 12:26PM by PIB Chennai

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், சமையலுக்கு தூய்மை எரிசக்தி பயன்பாட்டை உறுதி செய்வதிலும், பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றத்தை விளக்கும் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அரசின் கொள்கைகளில் பெண்கள் வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்கப்படாமல், அதன் தொடக்கப் புள்ளியாகவே உள்ளனர் என்ற ஒரு பெரிய மாற்றத்தை இந்தக் கட்டுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையை பதிவிட்டு பிரதமர் கூறியிருப்பதாவது:

“அரசின் கொள்கைகளில் பெண்கள் வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்கப்படாமல், அதன் தொடக்கப் புள்ளியாகவே உள்ளனர் என்ற ஒரு பெரிய மாற்றத்தை பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் எல்பிஜி இணைப்பை விரிவுபடுத்தியதோடு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியப் பரிமாற்றம் 10 கோடிக்கும் அதிகமான பெண்களைச் சென்றடைவதைச் சாத்தியமாக்கியுள்ளது. சமையலுக்கு தூய்மை எரிசக்தி பயன்பாட்டிற்கு மாறியது, வீடுகளுக்குள் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைத்து, நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் தற்போது, தொடர்ச்சியான தூய்மை எரிசக்தி பயன்பாடு, மலிவு விலை, எரிசக்தி பயன்பாட்டில் அனைவருக்கும் சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆழமான கருத்துக்கள் பொதிந்த இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

-----

(Release ID: 2257207)

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2270382) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam