தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலாவில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 08 JUN 2026 4:12PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பஞ்சாபின் சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலாவில் 2026 ஏப்ரல் மாதத்தில் மொபைல் நெட்வொர்க் தரத்தை மதிப்பீடு செய்தது.

அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களின் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளின் சிம் கார்டுகளை பயன்படுத்தி இச்சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பல்வேறு மேம்பட்ட கைப்பேசிகள் பயன்படுத்தப்பட்டன.

நகரப் பகுதிகளில் 453.2 கிலோ மீட்டர் தொலைவில் 15 முக்கிய இடங்களிலும், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலாவில் நடைப்பயணமாக 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கும், 2026 ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 10 வரை இச்சோதனை நடைபெற்றது. உரையாடல், துண்டிக்கப்பட்ட உரையாடல், அழைப்பு நேரம், பேச்சின் தரம் ஆகியவை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

ஜெய்ப்பூர் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270273&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2270345) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी