தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பகுதியில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 08 JUN 2026 3:33PM by PIB Chennai

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு, மேற்கு ஜெயின்டியா மலை மாவட்டங்கள், ரதா செர்ரே காசியா புஞ்சி முதல் ஜோவாய் வரையிலான பகுதிகளில் உள்ள மொபைல் நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மதிப்பீடு செய்தது.

2026 மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை  மூலம், மொபைல் நெட்வொர்க்கின் நிகழ்நேர தரத்தை மதிப்பீடு செய்து சரிபார்ப்பது இந்த ஆய்வின் நோக்கமாகும்.

நகரப் பகுதியில் 213 கிலோ மீட்டர் தொலைவிற்கும், நெடுஞ்சாலைப் பகுதியில் 98.9 கிலோ மீட்டர் தொலைவிற்கும் 10 முக்கிய இடங்களிலும், நடைப்பயணமாக 0.5 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது. 2026 மார்ச் 11 முதல் மார்ச் 16 வரை இந்த தரசோதனை  நடைபெற்றது. டிராயின் கொல்கத்தா பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270259&reg=3&lang=1

***

SS/IR/LDN/KR


(रिलीज़ आईडी: 2270319) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी