பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம் குறித்த பயிலரங்கு, 2026 ஜூன் 9 அன்று நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 07 JUN 2026 7:37PM by PIB Chennai

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கை 2026 ஜூன் 9 அன்று குஜராத்தின் காந்திநகரில் நடத்தவுள்ளது. இந்தப் பயிலரங்கில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், இணைச் செயலாளர் திருமதி முக்தா சேகர், குஜராத் அரசின் பஞ்சாயத்து, ஊரக வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் திரு தனஞ்சய் திவேதி, மாநில அரசின் கூடுதல் வளர்ச்சி ஆணையர் டாக்டர் கவுரவ் தஹியா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், குஜராத் முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்து மற்றும் வட்டார பஞ்சாயத்து அளவிலான தலைவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, குறிக்கோள் மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்பை அவர்களுக்கு எடுத்துரைப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. நிதிச் சுதந்திரமும்,  நல்ல உள்ளாட்சி நிர்வாகமும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதற்குச் சான்றாக விளங்கும் வகையில், தன்னிறைவுடனும், பொருளாதார நம்பிக்கையுடனும் கூடிய ஒரு புதிய தலைமுறை பஞ்சாயத்துகளை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270088&reg=48&lang=1

***

TV/BR/PD

 


(வெளியீட்டு அடையாள எண்: 2270297) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी