பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தேசிய மின் ஆளுகை விருது 2026: பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டிற்கு தங்க விருது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 5:43PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் 'பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு' (பிஏஐ) 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மின்-ஆளுகை விருதில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தரவுப் பகுப்பாய்வு மூலம் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்திய பிரிவில் இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 29 வது தேசிய மின்-ஆளுகை மாநாட்டில் இந்த விருது அளிக்கப்படும்.
விருதுடன், மேம்பாட்டிற்காக 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்தியாவின் கிராமப் பஞ்சாயத்துகளை, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் முதல் தரவு சார்ந்த கட்டமைப்பு இதுவாகும். தற்போதுள்ள 'பிஏஐ 2.0' பதிப்பு, 2.6 லட்சம் பஞ்சாயத்துகளை 150 குறிகாட்டிகள் மற்றும் 230 தரவுப் புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்கிறது. இந்த முன்முயற்சி வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை அடைவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269396®=3&lang=2
செய்தி அடையாள எண்:2269396
***
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2269708)
आगंतुक पटल : 7