பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஏகலைவா மாதிரிப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்காக, பீகார் மகாதலித் விகாஸ் இயக்கம், நெஸ்ட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
05 JUN 2026 6:53PM by PIB Chennai
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS), ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளி (EMRS) திட்டத்தின் செயலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும், மாநிலத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கவும், பீகார் அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பீகார் மகாதலித் விகாஸ் இயக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா, நெஸ்ட்ஸ் ஆணையர் டாக்டர் பிரதீமா மற்றும் பீகார் அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநர் திருமதி பிரியங்கா ராணி ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் விதிகளின்படி, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ₹1.47 லட்சம் என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம், நெஸ்ட்ஸ் உடன் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள இதர மாநிலங்களுக்கு இணையாக பீகார் விளங்குகிறது. பள்ளி உட்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பதற்கும், ஏகலைவா பள்ளிகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், சீரான தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் பணியமர்த்தல் ஒரு மையப்படுத்தப்பட்ட செயல்முறையின் மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269452®=3&lang=2
(Release ID: 2269452)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2269624)
आगंतुक पटल : 10