நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பு குறித்த பயிலரங்கு மும்பையில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 05 JUN 2026 6:11PM by PIB Chennai

பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பு குறித்த பயிலரங்கு மும்பையில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், பொதுக் காப்பீட்டு மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கப்பல் உரிமையாளர்கள், சரக்கு உரிமையாளர்கள் உட்படப் பல்வேறு முக்கியப் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய நிதிச் சேவைகள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் தேபஷிஷ் ப்ருஷ்டி, பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பின் கீழ் கப்பல் சேதக் காப்பீடு, சரக்குக் காப்பீட்டுக் கட்டணங்கள் 27 முதல் 48 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உள்நாட்டிலேயே பாதுகாப்புக் காப்பீட்டுத் தயாரிப்பை உருவாக்குவது, தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல்களுக்குக் காப்பீட்டுத் தொகுப்பை விரிவுபடுத்துவது, சர்வதேசக் காப்பீட்டுக் குழுக்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய வழிகாட்டுதல்களை அவர் முன்வைத்தார்.

இந்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை 2015 முதல் 36 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் திரு ஷியாம் ஜெகநாதன் தெரிவித்தார். தற்போதைய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையிலும் கடல்சார் வர்த்தகத்திற்குத் தடையற்ற காப்பீட்டுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இறையாண்மை உத்தரவாதத்துடன் குறைந்த பிரீமியம் கட்டணத்தில் காப்பீடு வழங்குவது கடல்சார் வர்த்தகத்தை எளிதாக்க வழிவகை செய்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269424&reg=3&lang=2

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2269621) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी