தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம்
प्रविष्टि तिथि:
05 JUN 2026 5:55PM by PIB Chennai
தில்லியில் வசிக்கும் தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் 2026 ஜூன் மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் முகாம்களை நடத்துகிறது. இந்த முகாம்கள் துவாரகா, ஜனக்புரி, ரோகிணி, லட்சுமி நகர் மற்றும் யமுனா விஹார் ஆகிய இடங்களில் உள்ள எம்.டி.என்.எல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளன.
இம்முகாம்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல், முகம் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பங்கேற்பாளர்கள் தங்களின் அட்டை, பான் அட்டை நகல் மற்றும் ஓய்வூதிய வழங்கல் ஆணை ஆகிய ஆவணங்களைக் கொண்டு வருவது அவசியம். ஏற்கனவே வாழ்வறி சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகிலுள்ள முகாமிற்குச் சென்று இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269411®=3&lang=2
செய்தி அடையாள எண்:2269411
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2269619)
आगंतुक पटल : 9